உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நினைத்தது நடக்க என்ன செய்யனும்: அவ்வையார்

நினைத்தது நடக்க என்ன செய்யனும்: அவ்வையார்

* கோயிலுக்கு சென்று கடவுளை வழிபடு. நினைத்தது நடக்கும்.  
* அம்மாவும், அப்பாவும் கண்கண்ட தெய்வம். அவர்கள் மீது அன்புடன் இரு.   
* சிக்கனமாக இருந்து பொருளைத் தேடு. அதுவே வளர்ச்சிக்கான வழி.
* உனக்கு கிடைக்காததை எண்ணி வருத்தப்படாதே. அதை மறந்துவிடு.
* பிறர் உனக்கு கெடுதல் செய்தால் அதை மறப்பதே உயர்ந்த செயல்.
* தேவையிருக்கும் இடம் சென்று உதவுவதே, ஆட்சி செய்வோரின் பணி.  
* வாரிசுகள் ஒற்றுமையாக வாழ்வதே பரம்பரையின் வளர்ச்சிக்கான வழி.
* கொடுத்த வாக்கை காப்பாற்றுவதே கல்வி கற்றதன் பயன்.  
* சிறிய செயலாக இருந்தாலும் அதை யோசித்து செய்.  
* தாய்ப்பாலை குடித்து வளரும் குழந்தையே பலம் பெறும்.
* தன் குழந்தை அறிவாளியாக இருப்பதே பெற்றோருக்கு பெருமை.
* உன்னிடம் உள்ள சொத்தை விட கல்வியே உண்மையான சொத்து.
* பெற்றோர், மனைவி, குழந்தை என குடும்பத்துடன் வாழ்வதே நல்லது.  
* அக்கம்பக்கத்தினருடன் அன்புடன் பழகு. அதுவே நலம் தரும்.  
* ஆதாரமாக விளங்கும் எண்ணும், எழுத்தும் நமக்கு கண் போன்றவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !