உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிராமங்களில் அய்யனாருக்கு தயாராகும் புரவிகள்

கிராமங்களில் அய்யனாருக்கு தயாராகும் புரவிகள்

பழையனூர்: பழையனூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் புரட்டாசி மாதம் நடக்க உள்ள புரவி எடுப்பு திருவிழாக்களுக்காக புரவிகள் தயாரிப்பு பணிகள் தீவிரம் அடைந்துள்ளன தமிழகத்தில் புரட்டாசி மாதத்தில் மழை வேண்டி கிராமப்புறங்களில் புரவி எடுப்பு திருவிழாக்கள் நடத்தப்படும்.


ஊரை காவல் காக்கும் அய்யனாருக்கு புரவி எடுப்பு திருவிழா நடத்தினால் மனம் குளிர்ந்து மழை பெய்ய வைப்பார் என்பது நம்பிக்கை. புரவி எடுப்பு திருவிழாவிற்காக மண்ணால் செய்யப்பட்டபுரவிகள் தயாரிப்பது வழக்கம், திருமணம், குழந்தைப்பேறு, உடல் நல பாதிப்பு ஆகியவிற்றிற்காக நேர்த்தி கடன் செலுத்த கிராமப்புற மக்கள் அய்யனாருக்கு புரவிகள், நாகம், காளை உள்ளிட்ட மண் பொம்மைகளை செலுத்துவது வழக்கம், இதற்காக பழையனூர் அருகே உள்ள அழகுடையான் கிராமத்தில் புரவிகள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. மூன்றரை அடி முதல் ஐந்தரை அடி உயரம் வரை புரவிகள் தயாரிக்கின்றனர். புரவிகளை மொத்தம் ஐந்து பாகங்களாக தனித்தனியே தயாரித்து அவற்றை இணைக்கின்றனர். பின் சூளையில் வைத்து சுடப்பட்ட பின் வர்ணம் தீட்டி அழகுபடுத்துகின்றனர். அழகுடையான் கிராமத்தில் பட்டனேந்தல், சங்கங்குளம், வீரனேந்தல், ஆனைக்குளம் உள்ளிட்ட கிராமப்புற அய்யனார்களுக்கு புரவிகள் தயாரிக்கப்படுகின்றன.


புரவி தயாரிப்பாளர் விஜயகுமார் கூறுகையில், சீசன் சமயத்தில் 100 புரவிகள் வரை தயாரிப்போம், புரட்டாசி மாதத்தில் அனைத்து கிராமங்களிலும் திருவிழா நடக்க உள்ளதால் முன்கூட்டியே புரவிகளை தயாரித்து வருகிறோம். புரவிகள், காளைகள் உள்ளிட்டவற்றை செய்வதுடன் அவற்றிற்கு கழுத்துப்பகுதியில் செய்யப்படும் அலங்காரங்கள் தான் நீண்ட நேரம் பிடிக்கும், மணிகள், கயிறுகள், மூக்குப்பட்டைகள் என தனித்தனியே செய்து இணைக்க வேண்டும், வர்ணம் தீட்டும் போதும் ஒவ்வொரு அலங்காரத்திற்கும் தனித்தனி வர்ணம் தீட்ட வேண்டும், சீசன் சமயத்தில் புரவிகள் அதிகளவில் தயாரிப்போம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !