ஜொலிக்க...
ADDED :2 days ago
உடலுக்கு ஆரோக்கியம், ஆத்மாவிற்கு பலம் தருபவர் சூரியன். இதையே ‘ஆரோக்யம் பாஸ்கராதிச்சேத்’ என்கிறது ரிக் வேதம். நாம் உயிர் வாழ காற்று, நீர், உணவு போல சூரிய ஒளியும் அவசியம். எனவே தினமும் சூரியநமஸ்காரம் செய்வதை கடமையாக்கினர் நம் முன்னோர்கள். குளித்ததும் கிழக்கு நோக்கி நின்று வணங்குவது சூரியநமஸ்காரம். மறையும் போதும் இதைச் செய்யலாம். அப்போது கீழ்க்கண்ட பாடலை 11 முறை சொன்னால் புகழுடன் ஜொலிப்பீ்ர்கள்.
பூசனை உலகோர் போற்றப் புசிப்பொடு சுகத்தை நல்கும்
வாசி ஏழுடைய தேர்மேல் மகாகிரி வலமாய் வந்த
தேசிகா எனைரட்சிப்பாய் செங்கதிரவனே போற்றி