மன்னிக்க வேண்டுகிறேன்
ADDED :172 days ago
அறிஞர் ஜான்பனியன் எழுதிய ஆங்கில நுால் துறக்கப்பயணம். இதை ‘ரட்சணிய யாத்திரிகம்’ என்ற பெயரில் தமிழில் மொழி பெயர்த்தவர் திருநெல்வேலி ரெட்டியார்பட்டி கிருஷ்ணப்பிள்ளை. அதிலுள்ள பாடல்...
தன்னரிய திருமேனி சதைப்புண்டு தவிப்பெய்தி
பன்னரிய பலபாடு படும்போதும் பரிந்து எந்தாய்இன்னதென அறிகிலார் தாம் செய்வது இப்பிழையை
மன்னியும் என்று எழிற்கனிவாய் மலர்ந்தார்
நம் அருள்வள்ளல்.
இயேசுவை சிலுவையில் அறைந்து சித்ரவதை செய்ய உத்தரவிட்டார் ரோமானியத் தலைவர். அதன்படி அவர்களும் செய்தனர். அப்போது, ‘அறியாமையால் இவர்கள் செய்யும் தவறை மன்னிப்பாயாக’ என தன் தந்தையிடம் வேண்டினார்.