உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு பிரதமர் மோடி சிறப்பு வழிபாடு; மக்களுக்கு வாழ்த்து

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு பிரதமர் மோடி சிறப்பு வழிபாடு; மக்களுக்கு வாழ்த்து

டெல்லி: தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு துணை ஜனாதிபதி இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடி கற்பூர ஆரத்தி செய்து பிரார்த்தனை செய்து வழிபட்டார். தொடர்ந்து அவர் துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணனுக்கு புத்தாண்டு  வாழ்த்துக்களை தெரிவித்தார். தமிழ் புத்தாண்டு தினத்தையொட்டி மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.


தமிழில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: புனிதமான புத்தாண்டு தினத்தையொட்டி இனிய நல்வாழ்த்துகள். இந்த ஆண்டு முழுவதும் மகிழ்ச்சியும், வெற்றியும், நல்ல ஆரோக்கியமும் நிறைந்திருக்க நான் பிரார்த்திக்கிறேன். சிறப்புமிக்க இந்த நாள் புதுப்பித்தல், நம்பிக்கை மற்றும் புதிய தொடக்கங்களின் கொண்டாட்டமாகும். இது தமிழ்ப் பண்பாட்டின் பெருமையைப் போற்றும் ஒரு தருணமாகும். அதன் இலக்கியம், இசை, கலை, தத்துவம், பக்தி ஆகியவற்றின் வளமான பாரம்பரியம் உலகெங்கிலும் உள்ள மக்களுக்குத் தொடர்ந்து உத்வேகம் அளிக்கிறது. சிறப்புமிக்க இந்த நாள் நமது சமூகத்தில் ஒற்றுமை உணர்வை மேலும் வளர்க்கட்டும். மகத்தான தமிழ்ப் பண்பாட்டால் உத்வேகம் பெற்று, நாம் வெற்றியின் புதிய சிகரங்களை அடைவதோடு, இயற்கையுடனான நமது பிணைப்பையும் ஆழப்படுத்திக் கொள்வோம். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார். நமது நிருபர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !