உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பீளமேடு அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயர் கோவிலில் தமிழ் புத்தாண்டு சிறப்பு பூஜை

பீளமேடு அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயர் கோவிலில் தமிழ் புத்தாண்டு சிறப்பு பூஜை

கோவை: தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு கோவை பீளமேடு ஸ்ரீ  அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயர் கோவிலில் இன்று சிறப்பு பூஜை அபிஷேகம் நடந்தது. 


பீளமேடு அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயர் கோவிலில் ஆஞ்சநேயரது திருமேனி சாளக்கிராமத்தினால் ஆனது. ஆஞ்சநேயரும் சிவனும் ஒன்று என்பதற்கேற்ப சிவலிங்கத்திற்கு மத்தியில் ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். இக்கோவிலில் இன்று தமிழ் புத்தாண்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஒரு லட்சத்து எட்டாயிரம் பழங்கள் அலங்காரத்துடன் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்வையொட்டி கோவில் வளாகம் முழுவதும் பழங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேயரை வழிபட்டனர். நிகழ்ச்சியின் நிறைவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !