உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தமிழ் புத்தாண்டு : ராமேஸ்வரத்தில் சுவாமி, அம்மன் வீதி உலா

தமிழ் புத்தாண்டு : ராமேஸ்வரத்தில் சுவாமி, அம்மன் வீதி உலா

ராமேஸ்வரம்: தமிழ் புத்தாண்டு யொட்டி ராமேஸ்வரம் கோயில் இருந்து ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் வீதி உலா சென்றனர்.

தமிழ் புத்தாண்டு யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி, அம்மனுக்கு மகா தீபாராதனை நடந்தது. இதன்பின் சுவாமி, அம்மன் தங்க ரிஷப வாகனத்தில் புறப்பாடாகி அக்னி தீர்த்த கடற்கரையில் எழுந்தருளினர். பின் அங்கு கூடியிருந்த பக்தர்களுக்கு சுவாமி, அம்மன் தீர்த்தம் வாரி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது அங்கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் சிவசிவ என கூறியபடி, அக்னி தீர்த்த கடலில் புனித நீராடினார்கள். பின் கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து புனித நீராடினார்கள்.

இதன்பின் சுவாமி, அம்மன் ரிஷப வாகனத்தில் ரதவீதியில் உலா சென்று பக்தர்களுக்கு அருளாசி வழங்கினர். அப்போது வீதியெங்கும் கூடியிருந்த பக்தர்கள் பயபக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !