/
கோயில்கள் செய்திகள் / பழநி முருகன் கோவிலில் தமிழ் புத்தாண்டு வழிபாடு; 3மணி நேரம் காத்திருந்து தரிசனம்
பழநி முருகன் கோவிலில் தமிழ் புத்தாண்டு வழிபாடு; 3மணி நேரம் காத்திருந்து தரிசனம்
ADDED :173 days ago
பழநி; பழநி கோயிலில் தமிழ் புத்தாண்டு, விடுமுறை தினத்தை முன்னிட்டு பக்தர்களின் கூட்டம் அதிகம் இருந்தது.
தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பழநிக்கு ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்தனர். வெளிமாநில, மாவட்ட வருகை புரிந்தனர். கோயிலுக்கு அவர்கள் செல்ல பக்தர்கள் ரோப்கார், வின்சில் பல மணி நேரம் காத்திருந்தனர். கோயிலில் பொது மற்றும் கட்டண தரிசன வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததால் பக்தர்கள் சிரமம் அடைந்தனர்.