உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை கோவில்களில் தமிழ் புத்தாண்டு சிறப்பு வழிபாடு

திருவண்ணாமலை கோவில்களில் தமிழ் புத்தாண்டு சிறப்பு வழிபாடு

திருவண்ணாமலை : தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார் தங்கத்தேரில், மூன்றாம் பிரகாரத்தில்   பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில் ஏராளமான பக்தரகள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். 


தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, திருவண்ணாமலை மாட வீதியில் உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில்,  பழ வகைகள் மற்றும் சிறப்பு அலங்காரத்தில்   பூத நாராயண பெருமாள் எழுதருளி  அருள்பாலித்தனர். 


தமிழ் புத்தாண்டு  முன்னிட்டு திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள பச்சை அம்மன் கோவிலில் உலக நன்மைக்காக 1008 சங்க அபிஷேக சிறப்பு யாகம் நடந்தது இதில் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர் .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !