உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அன்னூர் ஆஞ்சநேயர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

அன்னூர் ஆஞ்சநேயர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

மேட்டுப்பாளையம்: அன்னூர் சாலையில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில், திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

மேட்டுப்பாளையம் அன்னூர் சாலையில், தாளத்துறை டி.ஆர்.எஸ்., ஹைவே சிட்டி நகரில், அபீஷ்ட வரத ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்குள்ள ஆஞ்சநேயர் சுவாமி சிலையின் மார்பில், ராமர், சீதை உருவம் உள்ளது. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, மாலை 5:30 மணிக்கு சீதைக்கும், ராமச்சந்திர மூர்த்திக்கும் திருக்கல்யாண உற்சவம், முதன் முறையாக நடைபெற்றது. முன்னதாக சீர்வரிசை தட்டுகளை, ஊர்வலமாக அழைத்து வந்தனர். வேத முறைப்படி திருக்கல்யாண வைபவம் நடந்தது. அர்ச்சகர் ரிஷி பட்டர், சீதைக்கு மாங்கல்யம் அணிவித்தார். அதைத் தொடர்ந்து இரண்டு அர்ச்சகர்கள், மாலைகளை எடுத்து வந்து, பக்தர்கள் மத்தியில் நடனமாடி மாலை மாற்றினர். இந்த உற்சவத்தில் ஆஞ்சநேயர் தங்க கவச அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள், திருமணம் ஆகாத ஆண், பெண்கள் ஆகியோர் பங்கேற்றனர். பின்பு பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அர்ச்சகர் ரிஷி பட்டர் செய்து இருந்தார். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !