உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செஞ்சி கோவில்களில் புத்தாண்டு கொண்டாட்டம்

செஞ்சி கோவில்களில் புத்தாண்டு கொண்டாட்டம்

செஞ்சி: செஞ்சி பகுதி கோவில்களில் இன்று தமிழ் புத்தாண்டு சிறப்பு வழிபாடு நடந்தது.

காந்தி பஜார் செல்வவிநாயகர் கோவிலில் அதிகாலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம், வெள்ளி காப்பு அலங்காரமும் மகா தீபாரதனையும் மாலை லட்சதீபம் ஏற்றினர்.  கிருஷ்ணாபுரம் சுந்தர விநாயகர் கோவில் சுந்தர விநாயகர், பீரங்கிமேடு அருணாச்சல ஈஸ்வரர் கோவிலில் அருணாச்சலேஸ்வரர், அபிதகுஜலாம்பாள், வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் பூதேவி, ஸ்ரீதேவி சமேத வெங்கட்ரமணருக்கு சிறப்பு திருமஞ்சனமும், சிறப்பு அலங்காரமும் செய்தனர். செஞ்சிக்கோட்டை வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்தனர். சிறப்பு அர்ச்சனையும், மகா தீபாராதனையும் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !