தமிழ் வருட பிறப்பு: கோவை கோவில்களில் சிறப்பு வழிபாடு
ADDED :19 hours ago
கோவை : சித்திரை மாதம் தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு கோவை காட்டூர் அருள்மிகு அம்பிகை முத்துமாரியம்மன் கோவிலில் மூலவர் அம்மன் சொர்ண காப்பு அலங்காரத்துடன் தனலட்சுமி அலங்காரத்தில் பட்டவர்களுக்கு காட்சியளித்தார் இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியின் நிறைவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
சித்திரை மாதம் தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு கோவை ராம் நகர் பிரசன்ன மகா கணபதி கோவிலில் மூலவர் மற்றும் உற்சவருக்கு அபிஷேகம் பூஜை நடந்தது இதில்சந்தன காப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள் பாலித்த மூலவர் விநாயகர் இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.