மாதம்பட்டி சென்னனூர் ராதாகிருஷ்ணன் கோவிலில் கும்பாபிஷேகம்
ADDED :176 days ago
கோவை: மாதம்பட்டி அருகே உள்ள சென்னனூர் ஸ்ரீ ராதாகிருஷ்ணன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. பல்வேறு சிறப்பு வழிபாடுகளுக்கு பின் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ சடகோப ஜீயர் சுவாமிகள் கலந்துகொண்டு கும்பாபிஷேகத்தை நடத்தினார். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியின் நிறைவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.