/
கோயில்கள் செய்திகள் / திருச்சூர் பூரம் திருவிழா பாரமேக்காவு பகவதி கோவிலில் கொடியேற்றத்துடன் துவக்கம்
திருச்சூர் பூரம் திருவிழா பாரமேக்காவு பகவதி கோவிலில் கொடியேற்றத்துடன் துவக்கம்
ADDED :1 hours ago
கேரள மாநிலத்தின் பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா இன்று பாரமேக்காவு பகவதி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் ஏப். 26ம் தேதி பூரம் நடக்கிறது.
கேரளாவின் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா இன்று பாரம்பரியக் கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. பரமேக்காவு மற்றும் திருவம்பாடி ஆகிய இரு முக்கியக் கோயில்கள் உட்பட, இதில் பங்கேற்கும் எட்டு கோயில்களில் காலை 11 மணி முதல் 11.30 மணிக்குள் கொடிகள் ஏற்றப்பட்டு விழா துவங்கியது. வரும் 27ம் தேதி வாணவேடிக்கையுடன் விழா நிறைவடையும்.