உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சோற்றுத்துறை நாதர் கோவிலில் திருமஞ்சன அபிஷேகம்; திருக்கல்யானம்

சோற்றுத்துறை நாதர் கோவிலில் திருமஞ்சன அபிஷேகம்; திருக்கல்யானம்

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. கிணத்துக்கடவு, எஸ்.எம்.பி., நகர் அன்னபூரணி தாயார் உடனமர் சோற்றுத்துறை நாதர் கோவிலில், 14ம் ஆண்டு திருக்கல்யாண விழா நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில், சுவாமிக்கு திருமஞ்சன அபிஷேக வழிபாடு நடந்தது. முளைப்பாரி மற்றும் சீர்த்தட்டம் அழைத்து வரும் நிகழ்வு நடந்தது. வேள்வி, பொற்சுண்ணம் இடித்தல், வேள்வி நிறைவு, பேரொளி வழிபாடு, திருமுறை விண்ணப்பம் போன்றவைகள் நடந்தது. மதியம், இறைவன் இறைவி திருக்கல்யாணம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். தொடர்ந்து பொன் ஊஞ்சல் வழிபாடு, அன்னம்பாலிப்பு நடந்தது. மாலையில், வள்ளிக்கும்மி நிகழ்ச்சி நடந்தது. இதில், ஏராளமானோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் இறுதியில், கைலாய வாக்கியத்துடன் சுவாமி திருத்தேர் திருவீதி உலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !