உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் சித்திரை பிரம்மோத்சவம்; 22ம் தேதி துவக்கம்

திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் சித்திரை பிரம்மோத்சவம்; 22ம் தேதி துவக்கம்

திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் சித்திரை பிரம்மோத்சவம் 22ம் தேதி துவங்கி, 10 நாட்கள் நடைபெறுகிறது.


நுாற்றி எட்டு திவ்ய தேசங்களில் ஒன்றான திருவள்ளூர் வீரராகவர் கோவிலில், ஆண்டுக்கு இரு பிரம்மோத்சவங்கள் நடைபெறுகின்றன. நடப்பாண்டிற்கான சித்திரை பிரமோத்சவம், நாளை கொடியேற்றத்துடன் துவங்கி, மே 1ம் தேதியுடன் நிறைவடைகிறது. தினமும் காலை – மாலை இரு வேளையிலும் பல்வேறு வாகனங்களில் பெருமாள் வீதியுலா வருவார்.


உத்சவ விபரம் நாள் விசேஷம் ஏப்., 22 கொடியேற்றம் – காலை 4:15 மணி, தங்க சப்பரம் – காலை 5:30 மணி, சிம்ம வாகனம் – இரவு 7:00 மணி 23 ஹம்ஸ வாகனம் – காலை 5:00 மணி, சூரிய பிரபை – இரவு 7:00 மணி 24- கருட சேவை, கோபுர தரிசனம் – காலை 4:00 மணி, திருவீதி புறப்பாடு – காலை 6:00 மணி, ஹனுமந்த வாகனம் – இரவு 7:30 மணி 25 சேஷ வாகனம் – காலை 5:00 மணி, சந்திர பிரபை – இரவு 7:00 மணி 26 நாச்சியார் திருக்கோலம் – காலை 4:00 மணி, யாளி வாகனம் – இரவு 7:00 மணி. 27 சூர்ணாபிஷேகம் – காலை 5:00 மணி, வேணுகோபாலன் திருக்கோலம், வெள்ளி சப்பரம் – காலை 6:00 மணி. யானை வாகனம் – இரவு 7:00 மணி 28 தேர் புறப்பாடு – காலை 7:30 மணி, திருமஞ்சனம் – மாலை 6:30 மணி, கோவிலுக்குள் எழுந்தருளல் – இரவு 9:30 மணி 29 திருப்பாதம் சாடி திருமஞ்சனம் – மாலை 3:00 மணி, குதிரை வாகனம் – இரவு 7:30 மணி 30 ஆள்மேல் பல்லக்கு – காலை 4:00 மணி, தீர்த்தவாரி – காலை 10:30 மணி, விஜயகோடி விமானம் – இரவு 7:30 மணி மே 1 த்வாதச ஆராதனம் – காலை 10:30 மணி, கண்ணாடி பல்லக்கு – இரவு 9:00 மணி, கொடியிறக்கம் – இரவு 11.30 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !