உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தீவனூர் பெருமாள் கோவிலில்காணும் பொங்கல் வழிபாடு

தீவனூர் பெருமாள் கோவிலில்காணும் பொங்கல் வழிபாடு

திண்டிவனம்:தீவனூர் பெருமாள் கோவிலில் காணும் பொங்கலையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.திண்டிவனம் அடுத்த தீவனூர் ஆதிநாராயணபெருமாள் என்கிற லட்சுமிநாராயண பொருமாள் கோவிலில் நேற்று முன்தினம் காணும் பொங்கல் சிறப்பு வழிபாடு நடந்தது. காலை 7 மணிக்கு மூலவர் பெருமாள் சுவாமிக்கும், ஸ்ரீபக்த ஆஞ்சநேயருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. மாலை 3 மணி முதல் ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். இதில் மூலவர் லட்சுமி நாராயண பெருமாள் வெள்ளி கவசம், புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்மகர்த்தா முனுசாமி செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !