சிங்க வாகனத்தில் பெருமாள் வீதியுலா
ADDED :160 days ago
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவில், உற்சவர் பெருமாள் சிங்க வாகனத்தில் அருள்பாலித்தார்.
கள்ளக்குறிச்சி பூமிநீளா புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சிறப்பு பூஜைகள், சுவாமி வீதியுலா நடந்து வருகிறது. 3ம் நாள் உற்சவத்தில் உற்சவர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் சிங்க வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். வரும் மே 1ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. நகர நாயுடுகள் சங்கம் சார்பில் தினசரி அன்னதானம் நடக்கிறது.