கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் சேஷ வாகனத்தில் சுவாமி வீதியுலா
ADDED :164 days ago
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில், சித்திரை பிரம்மோற்சவத்தையொட்டி, சேஷ வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது.
கள்ளக்குறிச்சி புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில், சித்திரை பிரம்மோற்சவ விழா கடந்த 23 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில், தினமும் காலை, மாலை சிறப்பு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடக்கிறது.தொடர்ந்து மே 1ம் தேதி திருத்தேர் வடம் பிடித்தலும் நடக்கிறது. நேற்று மாலை பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் பெருமாள் சேஷ வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனார்.