பழநி கோயிலுக்கு புதிய பேட்டரி பஸ்: கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைப்பு
பழநி: பழநி கோயிலுக்கு பக்தர்களின் வசதிக்காக ஒரு பேட்டரி பஸ் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
பழநி கிரிவீதியில் நீதிமன்ற உத்திரவின்படி தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை. பக்தர்கள், கிரிவீதியில் வின்ச் ஸ்டேஷன், ரோப்கார் ஸ்டேஷன் சுற்றுலா பேருந்து நிலையம், ஆகியவற்றிற்கு மூத்த குடிமக்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் பயணிக்க பக்தர்களுக்கு இலவசமாக கோயில் நிர்வாகம் சார்பில் பேட்டரி கார், பேட்டரி பஸ் 2024,மார்ச்.,முதல் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது 11 பேர் அமரக்கூடிய 16 பேட்டரி கார், 14 பேர் அமரக்கூடிய பேட்டரி மினி பஸ் 1, 23 பேர் அமரக்கூடிய 20 பேட்டரி பஸ்,என 37 மின் வாகனங்களை இயக்கி வருகிறது. இந்நிலையில் ( சக்தி முருகன் கம்பெனி, தி சன்வே மேனர் ஹோட்டல் புதுச்சேரி) தனியார் நிறுவனங்கள் சார்பில் (மேனேஜிங் டைரக்டர் வேல்முருகன்,எக்ஸ்க்யூடிவ் டைரக்டர் குகன் ஆகியோர்) 23 பேர் அமரக்கூடிய எலக்ட்ரிக் பஸ்ஸை கோயில் நிர்வாகத்துடன் ஒப்படைத்தார். தற்போது கிரி வீதியில் கோயில் சார்பில் 38 மின் வாகனங்கள் பக்தர்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.