உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சீர்காழி சட்டை நாதர் கோவில் பிரம்மோற்சவ தேரோட்டம்: பக்தர்கள் வழிபாடு

சீர்காழி சட்டை நாதர் கோவில் பிரம்மோற்சவ தேரோட்டம்: பக்தர்கள் வழிபாடு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டை நாதர் கோவில் உள்ளது. இங்கு சிவபெருமான் பிரம்மபுரீஸ்வரர், தோணியப்பர், சட்டை நாதர் என மூன்று நிலைகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இத்தலத்தில் உமையம்பை அளித்த ஞான பாலை அருந்திய திருஞானசம்பந்த பெருமான் தனது மூன்றாவது வயதில் தோடுடைய செவியன் என்ற முதல் தேவார பதிகத்தை அருளினார். இந்த கோவிலின் பிரம்மோற்சவ விழா கடந்த 21 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 8ம் நாள் திருவிழாவான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. தேரோட்டத்தை முன்னிட்டு புதிய தேரில் விநாயகர் எழுந்தருள நான்கு வீதிகளையும் வளம் வந்தது. தொடர்ந்து பெரிய தேரில் சுவாமி, அம்பாள், திருஞானசம்பந்தர், பஞ்ச மூர்த்திகளுடன் எழுந்தருள சிறப்பு பூஜைகளுக்கு பிறகு திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் நான்கு வீதிகளையும் வலம் வந்தது. வழியெங்கும் பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !