உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சீரடி சாய்பாபா கோவிலில் த.வெ.க., தலைவர் விஜய் சுவாமி தரிசனம்

சீரடி சாய்பாபா கோவிலில் த.வெ.க., தலைவர் விஜய் சுவாமி தரிசனம்

மகாராஷ்டிரா: பிரசித்தி பெற்ற சீரடி சாய்பாபா தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தரிசனம் செய்தார்.


தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், மகாராஷ்டிராவில் உள்ள பிரசித்தி பெற்ற சீரடி சாய்பாபா கோயிலுக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று ஏப்ரல் 29 அதிகாலையில் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மகாராஷ்டிரா புறப்பட்ட விஜய், மதியம் 1.30 மணிக்கு சீரடி சாய்பாபா கோவில் வந்தார். அவருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து சாய்பாபாவை  தரிசனம் செய்தார். அரசியல் பயணத்தின் அடுத்தகட்டமாக, தனது ஆன்மீக சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வரும் விஜய் நேற்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்ததை தொடர்ந்து இன்று சீரடி தரிசனம் செய்தார். தனது தாயார் ஷோபா சந்திரசேகரின் நீண்டகால ஆசையை நிறைவேற்றும் வகையில், விஜய் கொரட்டூர் வெங்கடேஷ்வரா நகரில் சாயி மந்திர் என்ற பெயரில் சாய்பாபாவுக்குக் கோயில் ஒன்றைக் கட்டி கடந்த 2024 ஆண்டு பிப்ரவரி 11ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !