உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவை காட்டூர் கருமாரியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

கோவை காட்டூர் கருமாரியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

கோவை காட்டூர் வி.ஜி. லே அவுட்டில் உள்ள ஸ்ரீ கருமாரியம்மன் கோவில் 44ம் ஆண்டு திருக்கல்யாண உற்சவம் நடந்து வருகிறது. கடந்த செவ்வாய் கிழமை கணபதி ஹோமம், பூச்சாட்டுடன் துவங்கிய திருவிழாவில் நேற்று இரவு திருக்கல்யாணம் உற்சவம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தட்டுகளில் பக்தர்கள் சீர்வரிசை எடுத்து வர ஏராளமானோர் திருக்கல்யாண நிகழ்ச்சியை கண்டு மகிழ்ந்தனர். பின்னர் இசைக்கு தகுந்தார் போல் நடந்த குதிரை ஆட்டம் பக்தர்களை பரவச படுத்தியது. அதனைத் தொடர்ந்து இன்று காலை உருமி மேளம் முழங்க சக்தி கரக ஊர்வலம் முக்கிய வீதிகளில் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !