உடுமலை திருப்பதி கோவிலில் ஸ்ரீ நரசிம்மர் ஜெயந்தி விழா
ADDED :12 hours ago
உடுமலை: உடுமலை திருப்பதி ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில், ஸ்ரீ நரசிம்மர் ஜெயந்தியையொட்டி, சிறப்பு ேஹாமங்கள் நடைபெற்று வருகிறது. உடுமலை திருப்பதி ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில், ஸ்ரீ நரசிம்மர் ஜெயந்தி விழா நேற்று அங்குர ேஹாமத்துடன் துவங்கியது. இன்று காலை மஹா கும்பதஸ்தாபனம், யஜமான சங்கல்பத்துக்கு பிறகு, ேஹாமம் துவங்கியது. இதில், ஏராளமான பக்தர்கள், மக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் நாளை (30ம் தேதி) காலை, 8:00 மணிக்கு சிறப்பு ேஹாமம் துவங்குகிறது. காலை, 9:30 மணிக்கு நவகலச விசேஷ திருமஞ்சனம், விசேஷ தீபாராதனை நடக்கிறது.