கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் நாளை தேரோட்டம்
ADDED :18 hours ago
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவில் பிரம்மோற்சவ தேரோட்டம் நாளை காலை நடக்கிறது. கள்ளக்குறிிச்சி புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து தினமும் சவாமிக்கு அபிஷேக, ஆராதனை மற்றும் வீதியுலா நடக்கிறது. நேற்று முன்தினம் பெருமாள் தாயார் திருக்கல்யாணம் நடந்தது. அதனைத் தொடர்ந்து நாளை 1ம் தேதி திருத்தேர் விழா நடக்கிறது. அதனையொட்டி காலை 6:00 சுவாமியை தேரில் எழுந்தருளச் செய்து பக்தர்கள் வடம் பிடிக்கின்றனர்.