உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம்

சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம்

கடலுார்; சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.


கடலுார் : சிங்கிரிகுடி லட்சுமிநரசிம்மர் கோவில் தேரோட்டம் இன்று நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.கடலுார் அடுத்த சிங்கிரிகுடியில் பிரசித்திப் பெற்ற லட்சுமிநரசிம்மர் கோவில் அமைந்துள்ளது. இங்கு பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவத்தின் முக்கிய விழாவான தேர்த் திருவிழா இன்று காலை நடந்தது. லட்சுமிநரசிம்மருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து, தேருக்கு சிறப்பு பூஜைகள் செய்து, தேரோட்டம் துவங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !