உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கல்வியில் சிறப்பு பெற மதுரை மாணவிகள் திருவிளக்கு பூஜை!

கல்வியில் சிறப்பு பெற மதுரை மாணவிகள் திருவிளக்கு பூஜை!

மதுரை: மதுரை தெப்பக்குளம் மரகதவல்லி சமேத முக்தீஸ்வரர் கோயிலில் தைவெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடந்தது. இந்த விளக்கு பூஜை 28 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சுமார் 1400 பேர் கலந்து கொண்டு இந்த பூஜையை சிறப்பாக நடத்துகின்றனர். நாடு நலம் பெறவும், கல்வியின் தரம் உயரவும் இந்த பூஜை நடத்துவதாக மாணவிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !