மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சித்திரை தெப்ப திருவிழா
ADDED :1 hours ago
தேவகோட்டை: தேவகோட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா பத்து தினங்களாக நடைபெற்று வருகிறது. தினமும் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் சிறப்பு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். 11 ம் நாள் மாலை சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் பூஜைகள் நடந்தன. இதனையடுத்து இரவு பிரியாவுடைய அம்மனுடன் சுந்தரேஸ்வரர், மீனாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கோயில் எதிரே உள்ள ஊருணியில் அலங்கரிக்கப்பட்ட தெப்ப தேரில் மூன்று முறை ஊரணி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் ஊருணி படிகளில் விளக்கேற்றி சுவாமிகளை வழிப்பட்டனர்.