ரெட்டியார்பேட்டை கேசவ பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்
புதுச்சத்திரம்: ரெட்டியார்பேட்டை கேசவ பெருமாள் கோவிலில், திருக்கல்யாணம் நடந்தது. விழா கடந்த 27 ம் தேதி காலை 5.00 மணிக்கு லஷ்மி ஹோமம், திருமஞ்சனம், கொடியேற்றம் மற்றும் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. மாலை 6. 00 மணிக்கு மகாதீபாராதனை, 7.00 மணிக்கு சேஷவாகனத்தில் சுவாமி வீதிஉலா நடந்தது. 28 ம் தேதி மாலை 6.00 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, மகா தீபாராதனை நடந்தது. 29 ம் தேதி மாலை 6.00 மணிக்கு லட்சுமி நரசிம்மர் அவதாரத்தில் சுவாமி வீதி உலா, 30 ம் தேதி மாலை 7.00 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, மகாதீபாராதனை நடந்தது. சிறப்பு விழாவான திருக்கல்யாணம் நேற்று நடந்தது. அதையொட்டி மாலை 3.00 மணிக்கு பெருமாளுக்கு திருமஞ்சனம், சிறப்பு அபிஷேக ஆராதனை, இரவு 8.00 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத கேசவ பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடந்தது. 2 ம் தேதி (நேற்று) மஞ்சள் நீராட்டு விழா, சுவாமி வீதி உலா நடந்தது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள். கிராம பொதுமக்கள் செய்தனர்.