ராமேஸ்வரம் கோயில் படியில் வெள்ளி தகடு!
ADDED :5003 days ago
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி சன்னதிக்கு செல்லும், கருவறை படியில் இருந்த வெள்ளி தகடு சேதமடைந்தது. இதை, புதுப்பிக்குமாறு பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, கோயில் இணை ஆணையர் செல்வராஜ் முயற்சியால், சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியை சேர்ந்த சொர்ணாம்பிகா மோட்டார்ஸ் நிறுவனத்தினர், வெள்ளி தகடு அமைக்க முன்வந்தனர். பழைய வெள்ளி கதவுபடி அகற்றப்பட்டு, மூன்றரை அடி நீளம், ஒன்றரை அடி அகலத்தில், வெள்ளியிலான தகடு தயாரிக்கும் பணியில், ஸ்தபதிகள் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணி விரைவில் முடிந்து, சுவாமி சன்னதி முன்புள்ள படியில் இந்த தகடு பொருத்தப்பட உள்ளது என, கோயில் ஊழியர்கள் தெரிவித்தனர்.