பெருமாள் கோவிலில் தீர்த்தவாரி உற்சவம்
ADDED :1 days ago
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் தீர்த்தவாரி உற்சவம் நேற்று நடந்தது.
கோவிலில், பிரம்மோற்சவ திருவிழா கடந்த மாதம் 23ம் தேதி துவங்கியது. தொடர்ந்து தினமும் காலை, மாலை சுவாமி திருவீதியுலா உற்சவம் நடத்தப்பட்டது. நேற்று முன்தினம் சித்ரா பவுர்ணமியையொட்டி திருத்தேர் வடம் பிடித்தல் நடந்தது.
தொடர்ந்து நேற்று காலை அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாள் உற்சவர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் கலசாபிஷேகம் நடந்தது.
நித்திய அலங்காரங்களுக்குப்பின் பெருமாள் மண்டபத்தில் சுவாமியை எழுந்தருளச் செய்து, விஸ்வக்சேனர் வழிபாடு, பகவத்சங்கல்பம், சாற்றுமுறை, சேவையைத் தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தேசிக பட்டர் தலைமையிலான குழுவினர் பூஜைகளை செய்தனர்.