விருத்தகிரீஸ்வரர் கோவிலில் இசையாஞ்சலி நிகழ்ச்சி
விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில், சித்ரா பவுர்ணமியையொட்டி, திருமுதுகுன்றம் இசைச்சங்கம் சார்பில், இசையாஞ்சலி நிகழ்ச்சி நடந்தது.
சித்ரா பவுர்ணமியையொட்டி, கடந்த 27ம் தேதி திருக்கடையூர் பாலசுப்ரமணியன் நாதஸ்வர இசை நிகழ்ச்சி, கடந்த 28ம் தேதி நெய்வேலி விஜயலட்சுமி வீணை நிகழ்ச்சி, கடந்த 29ம் தேதி வடபழனி ஓதுவார் திருமுறை இசை நிகழ்ச்சி, 30ம் தேதி கலைமாமணி நித்யஸ்ரீ மகாதேவன் கர்நாடக இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.
அதைத்தொடர்ந்து, சித்ரா பவுர்ணமி தினமான நேற்று முன்தினம் காட்டுமன்னார்கோவில் ஸ்ரீ சிவாலயா நடனபள்ளி, நிவேதா ராஜேந்திரன் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. ஜெயின் ஜூவல்லரி உரிமையாளர் அகர்சந்த் கலைஞர்களுக்கு நினைவு பரிசு வழங்கினார்.
திருமுதுகுன்றம் இசை சங்கமம் தலைவர் சுந்தரவடிவேல், செயலர் ரவீந்திரநாதன், பொருளாளர் சோமசுந்தரம், இசையாஞ்சலி செயலர் ரமேஷ், நிர்வாகிகள் டாக்டர் வள்ளுவன், அருணாச்சலம், ஜெய்சங்கர், சபாநாதன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.