உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பூர் மகா மாரியம்மன், மாகாளி அம்மன் கோவில்கள் சித்திரை திருவிழா

திருப்பூர் மகா மாரியம்மன், மாகாளி அம்மன் கோவில்கள் சித்திரை திருவிழா

திருப்பூர்: நல்லூர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் ஸ்ரீ மாகாளி அம்மன் ஸ்ரீ பேச்சியம்மன் ஸ்ரீ செல்லாண்டியம்மன் கோவில்கள் சித்திரை மாத விழா துவங்கி நடைபெற்று வருகிறது.  இதில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த தெய்வங்கள் இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா நடைபெறும் நாட்களில் தினமும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது முதல் நாள் நிகழ்வாக கணபதி ஹோமத்துடன் மெகா துவங்கியதுதொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் சுதர்சன ஹோமம் காப்பு கட்டுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தினந்தோறும் அக்னிபூ சட்டியை தலையில் சுமந்து கொண்டு  ஆண்கள் காலை மற்றும் மாலை வேளைகளில் அம்மனை வழிபட்டனர் பெண்கள் முளைப்பாரி மற்றும் பால்குடங்களை தலையில் சுமந்து கொண்டு அம்மனை வழிபட்டனர் வரும் வெள்ளிக்கிழமை அன்று விழா நிறைவடையும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !