உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / துடியலூர் சக்தி மாரியம்மன் கோயில் திருவிழா:மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சி

துடியலூர் சக்தி மாரியம்மன் கோயில் திருவிழா:மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சி

துடியலூர்: துடியலூர் அருகே என்.ஜி.ஜி.ஓ., காலனி ரங்கம்மாள் காலனியில் உள்ள சக்தி மாரியம்மன் திருக்கோயிலில், 27ம் ஆண்டு சித்திரை திருவிழா நடந்தது. விழாவையொட்டி பூச்சாட்டுதல், அம்மன் தங்க கவச அலங்காரம், திருவிளக்கு பூஜை, கம்பம் நடுதல், அம்மனுக்கு பட்டு சீர் கொண்டு வருதல், அம்மன் அழைத்தல், திருக்கல்யாண நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று காலை, 7:00 மணிக்கு சக்தி கரகம் அழைத்தல், அக்னி சட்டி, பால்குடம் எடுத்து வருதல், அபிஷேகம் தொடர்ந்து சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை, மாவிளக்கு ஆகியன நடந்தன. இன்று மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகள் கோயில் நிர்வாக குழு தலைவர் விஜயன் தலைமையில் செய்யப்பட்டுள்ளது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !