உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொடைக்கானல் ஸ்ரீ சத்யசாய் சுருதியில் ஈஸ்வரம்மா தினம்

கொடைக்கானல் ஸ்ரீ சத்யசாய் சுருதியில் ஈஸ்வரம்மா தினம்

கொடைக்கானல்; கொடைக்கானல் ஏரி சாலையில் உள்ள ஸ்ரீ சத்யசாய் சுருதியில் ஸ்ரீ சத்யசாய் பாபாவின் அருள் அன்னை ஈஸ்வர அம்மாவின் 54வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.விழாவில் சுப்ரபாதம், நகர சங்கீர்த்தனா,கொடியேற்றத்துதல், வேத மந்திரத்துடன் சாய் பஜனைகள் நடந்தன.தொடர்ந்து மகாநாராயண சேவை என்னும் அன்னதானம், வஸ்திரதானத்தை பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை ஸ்ரீ சத்ய சாய் சேவா நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்திருந்தனர். ஏராளமான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஸ்ரீ சத்ய சாய்பாபா அருள் அன்னையின் அருள் பிரசாதம் பெற்று சென்றனர்.தொடர்ந்து கர்நாடக தெய்வீக சங்கீத பாடல் நிகழ்ச்சிகள் நடந்தன.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !