கொடை பெரிய மாரியம்மன் சித்திரை திருவிழா: அக்னி சட்டி எடுத்த பக்தர்கள்
ADDED :9 minutes ago
கொடைக்கானல்: கொடைக்கானல் மூஞ்சிக்கல் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப். 21 கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து சுவாமி நகர் வலம் வருதல், பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துதல், பொங்கல் வைத்தல், அக்னி சட்டி எடுத்தல், திருக்கல்யாண ஊஞ்சல் உற்சவம், அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி, மலர் வழிபாட்டு விழா, மாவிளக்கு எடுத்தல், சக்தி கிரகம் எடுத்தல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடந்தன. நேற்று நாயுடுபுரம் டிப்போவில் இருந்து பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மே 12 ல் மறு பூஜை மற்றும் பாலபிஷேகம் அதைத் தொடர்ந்து பால்குட ஊர்வலம் நிகழும். ஏற்பாடுகளை நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.