உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரிக்கல் லட்சுமி நரசிம்மர் கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம்

பரிக்கல் லட்சுமி நரசிம்மர் கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம்

உளுந்தூர்பேட்டை: பரிக்கல் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவில் பிரம்மோற்சவ விழா தேரோட்டம் நடந்தது.


உளுந்தூர்பேட்டை தாலுகா பரிக்கல் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவில் பிரம்மோற்சவ விழா தேரோட்டம் நேற்று நடந்தது. அதனையொட்டி கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா துவங்கியது. அதனைத் தொடர்ந்து தினசரி இரவு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்துடனா வீதியுலா நடந்து வந்தது. நேற்று காலை 7.30 மணியளவில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் தேரில் வைக்கப்பட்டு தேரோட்டம் நடந்தது.  தேரை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர். தேரோட்டத்தின் போது மின்வாரிய ஊழியர்கள் மின்கம்பிகளை அகற்றாததால். ஆங்கங்கே நிறுத்தப்பட்டு பின்னர் மின்கம்பிகள் அகற்றப்பட்டு தேரோட்டம் நடந்ததால் பக்தர்கள் அதிருப்தியடைந்தனர். இதனால் கோவிலில் இருந்து புறப்பட்ட தேர், சுற்றி வருவதில் தாமதம் ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !