உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுந்தரராஜ பெருமாள் கோயிலில் சித்திரை திருவோண சிறப்பு பூஜை

சுந்தரராஜ பெருமாள் கோயிலில் சித்திரை திருவோண சிறப்பு பூஜை

மானாமதுரை: வேம்பத்தூர் பூமி நீளா சுந்தரராஜ பெருமாள் கோயிலில் நடைபெற்ற சித்திரை திருவோணம் பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


மானாமதுரை அருகே வேம்பத்தூர் கிராமத்தில் உள்ள பூமி நீளா சுந்தரராஜ பெருமாள் கோயிலில் சித்திரை திருவோண பூஜையை முன்னிட்டு அதிகாலை சுவாமிகளுக்கு பால், பன்னீர், இளநீர், திரவியம், பஞ்சாமிர்தம், தேன், தயிர்,நெய் உள்ளிட்ட 18 வகையான மூலிகை பொருட்களால் திருமஞ்சனம் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேகம்,ஆராதனை பூஜைகள் நடைபெற்றது. பின்னர் அனுமனுக்கும் வடை மாலை சாற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பூஜையில் அம்பத்தூர் மற்றும் மானாமதுரை சிவகங்கை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !