வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் திருவிழா கோலாகல துவக்கம்
ADDED :9 hours ago
தேனி: வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவிற்காக ஏப்.,22ல் கம்பம் நடம் நிகழ்ச்சி நடந்தது. இன்று திருவிழா துவங்கியது. இன்று அதிகாலையில் அம்மன் கோயில் வீட்டில் இருந்து கோயிலுக்கு ஊர்வலமாக வந்தார். நாளை இரவு முத்துப்பல்லக்கு, நாளை புஷ்ப பல்லக்கில் வீதி உலா வருகிறார். மே 15ம் தேதி தேர் திருவிழா நடக்கிறது. பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் அக்னிசட்டி, ஆயிரம் கண்பானை, சேத்தாண்டி வேடமிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.பக்தர்கள் 30 நிமிடங்கள் வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர்.