கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் சிறப்பு அபிஷேகம் பூஜை
ADDED :155 days ago
கோவை: சித்திரை மாதம் ஏகாதசி திதியை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் உள்ள மூலவர் மற்றும் உற்சவருக்கு அபிஷேகம் பூஜை நடந்தது. இதில் மூலவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.