உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புத்தூர் பூமாயிஅம்மன் கோயிலில் ரத ஊர்வலம்: தெப்பம்

திருப்புத்தூர் பூமாயிஅம்மன் கோயிலில் ரத ஊர்வலம்: தெப்பம்

திருப்புத்தூர்: திருப்புத்தூர் பூமாயிஅம்மன் கோயிலில் வசந்தப் பெருவிழா ஒன்பதாம் திருநாளை முன்னிட்டு நேற்று அம்மன் ரதத்தில் திருவீதி உலா நடந்தது.


இன்று தெப்பத்தில் அம்மன் எழுந்தருளி வலம் வருகிறார். இக்கோயிலில் சப்த மாதர்களில் மத்தியில் பூமாயி அம்மன் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். மே 6ல் பூச்சொரிதல் நிறைவிற்கு பின்னர் பத்து நாள் விழாவான வசந்தப்பெருவிழா துவங்கியது. தொடர்ந்து தினசரி இரவில் சர்வ அலங்காரத்தில் அம்மன் கோயில் திருக்குளத்தை வலம் வந்தார். மே 10ல் பொங்கல் விழாவும், மே 12 ல் பால்குட விழாவும் நடந்தது. நேற்று இரவு 7:02 மணிக்கு உற்ஸவ அம்மனுக்கு தீபாராதனை நடந்தது. பின்னர் ரதத்தில் எழுந்தருளி பக்தர்கள் தரிசனம் துவங்கியது. பின்னர் பக்தர்கள் வடம் பிடிகக ரதம் ரதவீதிகளில் வலம் வந்தது. வழியெங்கும் பெண்கள் கோலமிட்டு அம்மனை வரவேற்று தரிசித்தனர். இன்று காலை 7:00 மணிக்கு தீர்த்தவாரி மஞ்சள் நீராட்டு விழாவும், இரவு 7:00 மணிக்கு மேல் தெப்பம் வலம் வருதலும், பின்னர் காப்புக்களைதலுடன் விழா நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !