உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பூர் ஸ்ரீமுத்துமாரியம்மன் பொங்கல் திருவிழா நிறைவு

திருப்பூர் ஸ்ரீமுத்துமாரியம்மன் பொங்கல் திருவிழா நிறைவு

திருப்பூர்: திருப்பூர், சந்திராபுரம், இந்திரா நகரிலுள்ள ஸ்ரீசித்தி விநாயகர், ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவில் பொங்கல் விழா நேற்று நிறைவடைந்தது. இக்கோவிலின், 31ம் ஆண்டு பொங்கல் விழா 3ம் தேதி கிராமசாந்தி, 5ம் தேதி பொரி மாற்றும் பூஜையுடன் துவங்கியது. கடந்த, 11ம் தேதி கணபதி வேள்வி, கம்பம், கும்பம் எடுத்த வரும் நிகழ்ச்சிகள் நடந்தது. பக்தர்கள், 13ம் தேதி பொங்கல் வைத்தும், மாவிளக்கு, முளைப்பாலிகை எடுத்தும் வழிபட்டனர். நேற்று முன்தினம் மஞ்சள் நீர் விழாவும், நேற்று மறுபூஜை மற்றும் அன்னதானமும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !