உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகாமுனீஸ்வரர் கோவில் திருவிழா

மகாமுனீஸ்வரர் கோவில் திருவிழா

வால்பாறை: மகாமுனீஸ்வரர் கோவிலின் 54ம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.வால்பாறை அடுத்துள்ள  பாரளை எஸ்டேட் ஆலமரம்(எ)பசுமலை  மகாமுனீஸ்வரர் திருக்கோவிலின் 54ம் ஆண்டு திருவிழா கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருக்கொடியை எஸ்டேட் உதவி மேலாளர் ஜான்மகேஷ் ஏற்றினார்.விழாவில், வரும் 25ம் தேதி  சப்பர ஊர்வலத்துடன் அப்பர்பாரளை எஸ்டேட் கோவிந்தன் கோவிலிருந்து தீர்த்தம் கொண்டுவரப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. இரவு 12.30 மணிக்கு குருதி பூஜை நடக்கிறது.வரும் 28ம் தேதி 12.30 மணிக்கு அன்னதானம் விழா நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்துவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !