பால தண்டாயுதபாணி கோவில் 27ம் தேதி தைப்பூச திருவிழா
ADDED :4677 days ago
ஊட்டி: ஊட்டி எல்க்ஹில் பகுதியில் உள்ள ஜலகண்டேஸ்வரி உடனுறை ஜலகண்டேஸ்வர சுவாமி மற்றும் பால தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் வரும் 27ம் தேதி தைப்பூச திருவிழா நடக்கிறது. ஊட்டி எல்க்ஹில் பகுதியில் உள்ள ஜலகண்டேஸ்வரி உடனுறை ஜலகண்டேஸ்வர சுவாமி மற்றும் பால தண்டாயுதபாணி சுவாமி கோவிலில், இந்த ஆண்டு தைப்பூச திருவிழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.தொடர்ந்து தினமும் காலை11:00 மணிக்கு பாலதண்டாயுதபாணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை, பிரசாத வினியோகம் நடந்து வருகிறது. வரும் 27ம் தேதி காலை 6:00 மணிக்கு 11வது நாள் திருவிழா நடக்கிறது. இதில், பெருந்திரு முழுக்காட்டல், அலங்காரம், பகல் 12:00 மணிக்கு திருத்தேர் திருவிழா நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், திருமுருக கிருத்திகை சங்கம் மற்றும் உபயதாரர்கள் மேற்கொண்டுள்ளனர்.