பூலோகநாதர் கோவிலில் சொர்ண பைரவருக்கு சிறப்பு வழிபாடு
ADDED :146 days ago
நெல்லிக்குப்பம்: சொர்ண பைரவருக்கு நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நெல்லிக்குப்பம் பூலோகநாதர் கோவிலில் சொர்ண பைரவருக்கு தனி சன்னதி உள்ளது. இந்த கோவிலில் அமாவாசையை முன்னிட்டு, சொர்ண பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சொர்ண பைரவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பைரவரை வழிபட்டனர்.