உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவிலில் சிவனடியார்கள் உழவாரப்பணி

திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவிலில் சிவனடியார்கள் உழவாரப்பணி

 திருப்பூர்: திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் நேற்று, சிவனடியார்கள் திருக்கூட்டம் சார்பில், உழவாரப்பணி நடந்தது.


திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி, ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில், வைகாசி விசாக தேர்த்திருவிழா தேரோட்டம், வரும், 30 மற்றும் 31 ம் தேதிகளில் நடக்க உள்ளது. தேர்த்திருவிழாவை முன்னிட்டு, திருப்பூர் சிவனடியார்கள் திருக்கூட்டம் மற்றும் பக்தர்கள் சார்பில் நேற்று, விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் உழவாரப்பணி நடந்தது. கோவிலில் உள்ள சன்னதி வளாகம், முன் மண்டபம், மஹா மண்டபம், பிரகார வளாகங்கள் சுத்தம் செய்து, தண்ணீர் ஊற்றி கழுவப்பட்டன. கற்துாண்களில், தண்ணீரை கொண்டு சுத்தம் செய்யப்பட்டது. பூஜை பொருட்கள், மடப்பள்ளி பொருட்களும் சுத்தம் செய்யப்பட்டன. கோவில்மேற்கூரை பகுதி பெருக்கி சுத்தம் செய்யப்பட்டது. சுவாமிகளுக்கு அணிவிக்கும் ஆடைகளும், துணிகளும் சலவை செய்து கொடுக்கப்பட்டன. தரைத்தளத்தில் படிந்துள்ள அழுக்குகள், சோப் ஆயில் கொண்டு சுத்தம் செய்யப்பட்டது. காலை, 8:00 மணிக்கு துவங்கிய உழவாரப்பணி, மாலை, 3:00 மணி வரை நடந்தது. குறிப்பாக, சோமாஸ்கந்தர் தினமும் திருவீதியுலா செல்லும், காட்சி வாகனங்களும், சுத்தம் செய்து தயார்படுத்தப்பட்டன. இதேபோல், ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில் வளாகத்திலும் உழவாரப்பணி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !