சங்கராபுரம் சுயம்பு முத்து மாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் உத்சவம்
ADDED :3 days ago
வாலாஜாபாத்: சங்கராபுரம், சுயம்பு முத்து மாரியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் இரவு ஊஞ்சல் உத்சவம் விமரிசையாக நடந்தது. வாலாஜாபாத் ஒன்றியம், சங்கராபுரம் கிராமத்தில் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், நேற்று முன்தினம் பல்வேறு பூஜைகள் மற்றும் சிறப்பு தீபாராதனை நடந்தன. இரவு 7:00 மணிக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், தேன் உள்ளிட்ட பல வகையான பொருட்களை கொண்டும், அம்மன் சிலை மீது மஞ்சள் நீர் ஊற்றியும் அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு ஊஞ்சல் உத்சவம் விமரிசையாக நடந்தது. இதில், அம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர் களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து, கோவில் வெளிப்புறத்தில் அம்மன் வீதியுலா நிகழ்ச்சி நடந்தது.