கே.புதுப்பட்டி முத்துமாரியம்மன் கோயில் பொங்கல் திருவிழா
ADDED :3 days ago
எஸ்.புதூர்: எஸ்.புதூர் அருகே கே.புதுப்பட்டி முத்துமாரியம்மன் கோயில் பொங்கல் திருவிழா நடந்தது. மே.10 ல் காப்பு கட்டுதலுடன் துவங்கி தினமும் வழிபாடு, அன்னதானம் நடந்தது. நேற்று முத்துமாரியம்மன் மின்னொளி சப்பரத்தில் வீதி உலா வந்தார். பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். பக்தர்கள் உடம்பில் சேறு பூசியும், கேளிக்கை வேடங்கள் அணிந்தும் ஆட்டம், பாட்டத்துடன் ஊர்வலமாக வந்து முத்துமாரியம்மன் கோவிலில் மூன்று முறை வலம் வந்து கோவில் முன்பாக வைந்தானை அடித்தனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.