உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்காமீஸ்வரர் கோவில் தேர் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

திருக்காமீஸ்வரர் கோவில் தேர் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

வில்லியனுார்: திருக்காமீஸ்வரர் கோவில் பிரமோற்சவ தேர் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.


வில்லியனுார் கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ தேர் திருவிழா வரும் 28தே தி நடைபெற உள்ளது. தேர் திருவிழாவை முன்னிட்டு கடந்த 12ம் தேதி பிடாரியம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் 18 ம் தேதி ரத உற்சவமும் நடைபெற்றது. நேற்று (20ம் தேதி) இரவு 8:30 மணியளவில் திருக்காமீஸ்வரர் கோவில் பிரமோற்சவ தேர் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து வரும் ஜூன் 1ம் தேதி வரையில் நடைபெறும் விழாவில் தினமும் ஒவ்வொரு மரபினர்கள் சார்பில் காலையில் சிறப்பு அபிேஷகமும், இரவு அலங்கரிக்கப்பட்ட சுவாமி வீதியுலா நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. அதில் 23ம் தேதி இரவு பாரிவேட்டை நிகழ்ச்சியும், 25ம் தேதி காலையில் 63 நாயன்மார்கள் வீதியுலா மற்றும் இரவு வெள்ளி யானை, ரிஷபம், மயில் வாகன வீதியுலா நிகழ்ச்சியும், 27ம் தேதி இரவு திருக்கல்யாணம் உற்சவமும் நடைபெறுகிறது. முக்கிய விழாவாக வரும் 28ம் தேதி காலை 8:10 மணிக்கு மேல் மிதுன லக்கினத்தில் தேர் திருவிழா நடைபெறுகிறது. விழாவில் கவர்னர், முதல்வர், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து துவக்கிவைக்கின்றனர். அதனை தொடர்ந்து 29ம் தேதி நண்பகல் தீர்த்தவாரி நிகழ்ச்சியும், இரவு தெப்பல் உற்சவமும், 30ம் தேதி இரவு முத்துப்பல்லக்கு உற்சவமும், 31ம் தேதி விடையாற்றி உற்சவமும், ஜூன் 1ம் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவத்து டன் திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி திருகாமீஸ்வரன், சிவனடியார்கள், சிவாச்சாரியர்கள் மற்றும் உற்சவ மரபினர்கள் செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !