உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆர்.கே.பேட்டை சுந்தரராஜ பெருமாள் கோவில் தேர் திருவிழா கோலாகலம்

ஆர்.கே.பேட்டை சுந்தரராஜ பெருமாள் கோவில் தேர் திருவிழா கோலாகலம்

ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டையில், சுந்தரராஜ பெருமாள் கோவில் பிரம்மோத்சவத்தில் இன்று தேர் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.


ஆர்.கே.பேட்டை பிராமணர் வீதியில் உள்ளது சுந்தரராஜ பெருமாள் கோவில். இந்த கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோத்சவம் நடத்தப்படுகிறது. நடப்பு ஆண்டு பிரம்மோத்சவம் கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதை தொடர்ந்து அன்று மாலை உற்சவர் சுந்தரராஜ பெருமாள், ஹம்ச வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார். தொடர்ந்து தினசரி சிம்மம், சந்திர சூரிய பிரபை, கருட சேவை, அனுமந்த வாகனங்களில் எழுந்தருளிய சுவாமி, இன்று தேரில் எழுந்தருளினார். மாடவீதியில் வலம் வந்த தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். மாலை 6:00 மணியளவில், கோவில் வளாகத்தில் திருமஞ்சனம் நடத்தப்பட்டது. இன்று குதிரை வாகன உத்சவத்துடன் சுந்தரராஜ பெருமாள் கோவில் பிரம்மோத்சவம் நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !